Disneyland 1972 Love the old s
Tamil Full Movie




60-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த திரைப்படமாக இந்தியில் வெளியான ‘பான் சிங் தோமர்’ என்ற படம் தேர்வாகியுள்ளது. இப்படத்தில் நடித்த இர்ஃபான் கான் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சிறந்த இயக்குனர் விருதுக்கு மராத்தியில் வெளியான ‘தாக்’ படத்தை இயக்கிய சிவாஜி லோடன் படேல் தேர்வாகியுள்ளார். சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது ‘சிட்டகாங்’ என்ற படத்திற்காக பாடிய ஷங்கர் மகாதேவன் பெறுகிறார். சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ‘விக்கி டோனர்’ தேர்வாகியுள்ளது.

சிறந்த பிராந்திய மொழி திரைப்படங்களுக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த தமிழ் படமாக ‘வழக்கு எண் 18/9’ தேர்வு பெற்றுள்ளது. இப்படத்தில் சிறப்பான ஒப்பனை செய்த ராஜா-வுக்கு சிறந்த ஒப்பனை கலைஞர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும் தடைகளை தாண்டி வெளியான கமலின் ‘விஸ்வரூபம்’ படத்திற்கு சிறந்த கலை இயக்குனர் மற்றும் சிறந்த நடன இயக்குனருக்கான விருது கிடைத்துள்ளது. சென்ற வாரம் வெளியான ‘பரதேசி’ படமும் ஒரு விருதை தட்டிச் சென்றுள்ளது. இப்படத்தில் சிறப்பாக ஆடை வடிவமைப்பு செய்த பூர்ணிமா-வுக்கு சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.